ஹீரோ டேஸ் ஸ்கூட்டர் கொலம்பியாவில் வெளியிடப்பட்டது

ஹீரோ மோட்டார் நிறுவனம் கொலம்பியாவில் டேஸ் ஸ்கூட்டர் மாடலை வெளியிட்டது. இந்தியாவின் மிகப்பரிய இரண்டு சக்கர வாகன நிறுவனமான ஹீரோ உலகம் முழுவதும் அதன் கிளைகளை பரப்பி வருகிறது.

டேஸ் ஸ்கூட்டர்  முதன் முதலாக 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் தற்போது கொலம்பியாவில்  வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலில் 110 cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8.4 bhp திறனையும் 9.4 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் LED பின்புற விளக்குகள், மொபைல் சார்ஜர் போன்ற ஹீரோவின் சிறப்புகள் இதிலும் உள்ளது.

இந்த மாடல் இந்தியாவில் மாஸ்ட்ரோ எட்ஜ் என்ற பெயரிலும் மற்ற நாடுகளில் டேஸ் என்ற பெயரிலும் வெளியிடப்படும். மேலும் இந்தியாவில் தீபாவளி பண்டிகை காலத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.