செப்டம்பர் 29 அன்று ஹீரோ டுயட் மற்றும் மாஸ்ட்ரோ எட்ஜ் மாடலை வெளியிடுகிறது ஹீரோ

ஹீரோ நிறுவனம் டுயட் மற்றும் மாஸ்ட்ரோ எட்ஜ் மாடல்களை செப்டம்பர் 29 ஆம் தேதி அன்று வெளியிடுகிறது. சில நாட்களுக்கு முன்பு தான் ஹீரோ நிறுவனம் கொலம்பியாவில் டேஸ் ஸ்கூட்டர் மாடலை வெளியிட்டது. இந்த மாடல் தான்  இந்தியாவில் மாஸ்ட்ரோ எட்ஜ் என்ற பெயரில் வெளியிடப்படும்.

இந்த இரண்டு  மாடலிலும்  110 cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8.4 bhp திறனையும் 9.4 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் LED பின்புற விளக்குகள், மொபைல் சார்ஜர் போன்ற ஹீரோவின் சிறப்புகள் இதிலும் உள்ளது.

ஹீரோ நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் சிறந்த இடத்தை  பிடிக்க பல புதிய மாடல்களை வெளியிட்டு போராடி வருகிறது. இந்த மாடல்களின் விலை 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.