சத்தமில்லாமல் மீண்டும் வெளியிடப்பட்டது ஹீரோ கரிஷ்மா ZMR

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சத்தமில்லாமல் மீண்டும் கரிஷ்மா ZMR மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் ஸ்டாண்டர்ட் மற்றும் இரட்டை வண்ணம் என இரண்டு வேரியன்ட்டுகளில் முறையே ரூ 108,000 மற்றும் ரூ 110,500 சென்னை ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலின் வடிவமைப்பு மற்றும் என்ஜின் என எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இரட்டை வண்ண வேரியன்டில் மட்டும் புதிய கிராபிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் 223 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின்  20 bhp (8000 rpm) திறனும் 19.7 Nm (6500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 51 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 3.6 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல் அதிக பட்சமாக 129 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். மேலும் இந்த மாடல் சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என 3 விதமான வண்ணங்களில் கிடைக்கிறது. கூடிய விரைவில் ஹீரோ நிறுவனம் மேம்பாடுகளுடன் கூடிய கரிஷ்மா ZMR வெளியிடும் என எதிர்பார்க்கலாம். இந்த மாடல் பஜாஜ் பல்சர் RS 200 மற்றும் யமஹா பேசர் 25 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.