ஏழு பைக் மாடல்களை விற்பனையில் இருந்து நீக்கியது ஹீரோ மோட்டோ கார்ப்

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் கரிஸ்மா R , இக்னைட்டர்,  ஹாங்க் , க்ளாமர் , பேஷன் X ப்ரோ , எக்ஸ்ட்ரீம் மற்றும் பேஷன் ப்ரோ போன்ற ஏழு பைக் மாடல்களின் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. இதன் மூலம் இந்த மாடல்கள் விற்பனையில் நிறுத்தப்படும் என தெரிகிறது. ஹீரோ நிறுவனத்தின் அதிகாரபூர்வ தளத்திலும் இந்த மாடல் தொடர்பான விவரங்கள் ஏதும் இல்லை.

ஹீரோ நிறுவனம் மற்ற மாடல்களை எல்லாம் BSIV என்ஜினிற்கு மேம்படுத்திய போதும் இந்த மாடல்மாடல்களை மேம்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. விற்பனையில் மிகக்குறைந்த எண்ணிக்கையை பதிவு செய்து வருவதால் ஹீரோ நிறுவனம் இந்த மாடல்களின் விற்பனையை நிறுத்துகிறது. மேலும் ஹீரோ நிறுவனம் பல புதிய மாடல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.