ஹீரோ நிறுவனம் டூயட் மாடலை ரூ.48,400 ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது

ஹீரோ நிறுவனம் டூயட் மாடலைஇன்று வெளியிட்டுள்ளது. இந்த மாடல் LX மற்றும் VX என இரண்டு வேரியண்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது. LX  வேரியன்ட் ரூ. 48,400 விலையிலும் VX  வேரியன்ட் ரூ. 49,900 விலையிலும் கிடைக்கும். இந்த விலை பெங்களூர் ஷோரூம் விலை ஆகும்.

இந்த மாடலில் 110.9 cc கொள்ளளவு கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8.31 bhp (8000rpm) திறனையும் 8.3 Nm (6500rpm) இழுவைதிறனையும் வழங்கும்.  மேலுமிந்த மாடல் 64 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுயட் மாடலில் வெளிப்புற எரிபொருள் நிரப்பும் வழி, டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர், மொபைல் சார்ஜிங் வசதி ஆகியவை குறிப்பிட்டு கூறும் சிறப்புகளாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.