ரூ. 49500 ஆரம்ப விலையில் ஹீரோ மாஸ்ட்ரோ எட்ஜ் வெளியிடப்பட்டது மற்றும் டுயட் மாடல் காட்சிப்படுத்தப்பட்டது

மாஸ்ட்ரோ எட்ஜ் LX  வேரியன்ட் ரூ. 49500 விலையிலும் VX  வேரியன்ட் ரூ. 50700 விலையிலும் இன்று வெளியிடப்பட்டது. மேலும் ஹீரோ டுயட் மாடலும் காட்சிப்படுத்தப்பட்டது. டுயட் மாடலின் விலை விவரங்களை ஹீரோ நிறுவனம் வெளியிடவில்லை ஆனால் விரைவில் விற்பனைக்கு கிடைக்கும் என்று மட்டும் அறிவித்துள்ளது.

இந்த இரண்டு  மாடலிலும்  110.9 cc கொள்ளளவு கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8.31 பிப் (8000rpm) திறனையும் 8.3 Nm (6500rpm) இழுவைதிறனையும் வழங்கும். 

டுயட் மாடலில் வெளிப்புற எரிபொருள் நிரப்பும் வழி, டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர், மொபைல் சார்ஜிங் வசதி ஆகியவை குறிப்பிட்டு கூறும் சிறப்புகளாக இருக்கும். இவை அனைத்தும் ஹீரோ மாஸ்ட்ரோ எட்ஜ் மாடலிலும் உள்ளது மேலும்  LED பின்புற விளக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹீரோ மாஸ்ட்ரோ எட்ஜ் மாடல் அறிமுகம் செய்யும் போது டேஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.