எரிக் புல் நிறுவனத்துடனான நடவடிக்கையை இந்தியாவிற்கு மாற்றியது ஹீரோ

எரிக் புல் ரேசிங் நிறுவனம் கடன் சுமையில் இருப்பதால் அந்த நிறுவனத்துடனான அராய்ச்சி மற்றும் மேம்பாடு நடவடிக்கையை இந்தியாவிற்கு மாற்றியது ஹீரோ நிறுவனம். 

ஹீரோ மோட்டார் நிறுவனம் எரிக் புல் ரேசிங் நிறுவனத்துடன் சேர்ந்து HX 250 R , ஹஸ்டர், ஹைப்ரிட் ஸ்கூட்டர் மற்றும் பல மாடல்களை சோதனை செய்து வந்தது. இந்த மாடல்களின் கான்செப்டை சில மோட்டார் கண்காட்சியிலும் கட்சிக்கு வைத்தது. அதில் குறிப்பாக HX 250 R எனாப்படும் ஹீரோவின் முதல் ஸ்போர்ட்ஸ் மாடலை விரைவில் வெளியிடுவதாக இருந்தது.

இந்நிலையில் எரிக் புல் ரேசிங் நிறுவனம் கடன் சுமையில் தத்தளிப்பதால் அந்த நிறுவனத்துடனான அராய்ச்சி மற்றும் மேம்பாடு நடவடிக்கையை இந்தியாவிற்கு மாற்றியது ஹீரோ நிறுவனம்.  

இந்த மாடல்கள் தொடர்பான அணைத்து நடவடிக்கைகளும் இந்தியாவிலே கவனிக்கப்படும். மேலும் எரிக் புல் ரேசிங் நிறுவனத்துடனான உடன்பாடு துண்டிக்கப்படும என்பது பற்றி எந்த ஒரு தகவலையும்  இது வரை ஹீரோ நிறுவனம் வெளியிடவில்லை.

எனினும் HX 250 R மாடலை 2016 அம ஆண்டு டெல்லியில் நடைபெறும் வாகன கண்காட்சியில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக செய்து வருகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.