2018 ஆம் ஆண்டு கோல்ட் விங் மாடலின் விநியோகத்தை தொடங்கியது ஹோண்டா

ஹோண்டா நிறுவனம் 2018 ஆம் ஆண்டு கோல்ட் விங் மாடலின் விநியோகத்தை அதிகாரப்பூர்வமாக நேற்று தொடங்கியுள்ளது. ஜெய்பூரில் உள்ள ஒரு வாடிக்கையாளருக்கு இந்தியாவில் முதல் 2018 ஆம் ஆண்டு கோல்ட் விங் மாடலை விநியோகம் செய்துள்ளது ஹோண்டா. இந்த மாடல் ரூ 26.85 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் சிவப்பு வண்ணத்தில் மட்டும் கிடைக்கும். மேலும் இந்த மாடல் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய கோல்ட் விங் மாடலில் வடிவமைப்பு, என்ஜின் மற்றும் உபகரணங்கள் என அனைத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாடல் புதிய LED முகப்பு மற்றும் பின்புற விளக்குகள், ஏரோ டைனமிக், டிசைன் என முற்றிலுமாக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பிரேம் முந்தய மாடலைவிட இலகுவாக வடிவமைப்பட்டுள்ளது. எனினும் அதிக எடை தாங்குமளவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷன் சிஸ்டமும் இந்த மாடலில் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாறுதல்களால் புதிய மாடல் முந்தய மாடலை விட 40 கிலோ குறைவான எடை உள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் 7 இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், கீலெஸ் இக்னிஷன், மியூசிக் சிஸ்டம், டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம் மற்றும் காற்றுப்பை என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 1833 cc கொள்ளளவு கொண்ட பிளாட் சிக்ஸ் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 126bhp (5500 rpm) திறனும் 170Nm (4500rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் முந்தய மாடலை விட 20% அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டது என ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மாடலில் ஈக்கோ, ரெயின், டூரிங் மற்றும் ஸ்போர்ட் என நான்கு டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஆறு ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏழு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கும். மேலும் இந்த மாடலில் டிராக்சன் கண்ட்ரோல், குரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.