ரூ.81,249 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது ஹோன்டா CB ஹார்நெட்

ஹோன்டா நிறுவனம் ரூ.81,249 சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் புத்தம் புதிய ஹார்நெட் மாடலை வெளியிட்டுள்ளது. அத்துடன் இணையத்தின் வழியாக முன்பதிவு செய்வதற்கு ஏற்றவாறு மொபைல் ஆப்பையும் வெளியிட்டுள்ளது.

நேக்ட்  மாடல் வடிவத்தில் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ஹோண்டா - CB யுனிகார்ன் 160 மாடலில் பயன்படுத்தப்படும் அதே என்ஜின் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் 162.71cc கொள்ளளவு கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 15.7 bhp (8500 rpm) திறனும்  14.76 Nm (6500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. மேலும் இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 100 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். 

இந்த மாடல் முன்புறம் மட்டும்  டிஸ்க் ப்ரேக் மற்றும் இரண்டு டிஸ்க் ப்ரேக் கொண்ட மாடல் என இரண்டு விதங்களில் கிடைக்கும். மேலும்  இந்த மாடல் கருப்பு, ப்ளூ, சிவப்பு, வெள்ளை மற்றும் ஆரஞ்சு என 5 வண்ணங்களில் கிடைக்கும். முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட், பின்புற LED விளக்குகள் மற்றும் மோனோ சஸ்பென்சன் ஆகியவற்றை சிறப்புகளாக கூறலாம். இந்த மாடல் சுசுகி - ஜிக்சர், யமஹா - FZS ஆகிய மாடலுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.