புதிய வண்ணங்களில் வெளியிடப்பட்டது ஹோண்டா CBR 250 R

ஹோண்டா CBR 250 R மாடல் புதிய வண்ணங்களில் வெளியிடப்பட்டுள்ளது. கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலில் 249 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 

இதன் பெட்ரோல் என்ஜின்  26 bhp (8500 rpm) திறனும்  22.9 Nm (7500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. 

இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 3 முதல் 4 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல் அதிக பட்சமாக 145 முதல் 150 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.