ரூ 60,277 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர்

ஹோண்டா நிறுவனம் க்ரேஸியா எனும் புத்தம் புதிய ப்ரீமியம் ஸ்கூட்டர் மாடலை ரூ 60,277 சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் ஆக்டிவா 125 மாடலுக்கு மேலாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் தான் தற்போது ஹோண்டா நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்கூட்டர் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. 

இளைஞர்களை குறிவைத்து இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்புறத்தில் பெரிய முகப்பு விளக்குகள் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் பின்புறத்தில் LED விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் பார்ப்பதற்கு சற்று டியோ ஸ்கூட்டர் போன்ற தோற்றத்தை தருகிறது. இந்த மாடலின் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் முழுவதும் டிஜிட்டல் யூனிட்டாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ஆரஞ்சு, கருப்பு, சிவப்பு, வெள்ளை, மேட் ப்ளூ மற்றும் மேட் க்ரே என ஆறு வித வண்ணங்களில் கிடைக்கும்.

இந்த மாடலில் 124.9 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின்  8.52 bhp (6500 rpm) திறனும் 10.54 Nm (5000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடலின் இரண்டு வீலிலும் 130 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட ட்ரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் முன்புறத்தில் மட்டும் 130 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக் ஆப்ஷனாக கிடைக்கும். இந்த மாடல் STD, Dlx மற்றும் அலாய் என மூடன்று வேரியன்ட்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது. 

வேரியன்ட் வாரியாக சென்னை ஷோரூம் விலை விவரம்:
Grazia STD - ரூ 60,277
Grazia Alloy - ரூ 62,208
Grazia Dlx - ரூ 64,649

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.