சுயமாக சமநிலையில் இருக்கும் மோட்டார் பைக்கை அறிமுகப்படுத்தியது ஹோண்டா

லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறும் கன்சூமர் எலெக்ட்ரானிக்கஸ் கண்காட்சியில்    ஓட்டுநர் உதவி இல்லாமல் சுயமாக சமநிலையில் இருக்கும் மோட்டார் பைக்கை அறிமுகப்படுத்தியது ஹோண்டா நிறுவனம். ரைடிங் அசிஸ்ட் எனும் தொழில்நுட்பம் மூலம் கைரோஸ்கோப் மற்றும் எந்த ஒரு உபகாரணத்தின் உதவியும் இல்லாமல் இதை செய்துள்ளது ஹோண்டா நிறுவனம்.

மிகவும் எளிமையான தொழில்நுட்பம் மூலம் இதை செய்துள்ளது ஹோண்டா. இந்த சிஸ்டத்தை ஆன் செய்தவுடன் முன்புற போர்க் ஹேண்டில்பாரில் இருந்து பிரிந்து அதன் கோணத்தை அதிகரிக்கிறது. இதனால் பைக்கின் வீல் பேஸ் அதிகரிக்கும். அதன் பிறகு சிறிது முன்புற வீலை திருப்புவதன் மூலம் நிலைப்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு சைக்கிளில் சாகசம் செய்பவர்கள் முன்புற சக்கரத்தை திருப்பி பேலன்ஸ் செய்வதின் அடிப்படையில் தான் இந்த தொழில் நுட்பமும் இயங்குகிறது.

மேலும் இதில் ஓட்டுநர் நடப்பதற்கு சமமாக தானாக பைக்கை நகர வைக்கவும் முடியும். தானியங்கி கார்கள் ஏற்கனவே நிறைய நிறுவனங்கள் அறிமுகம் செய்திருக்கின்றன ஆனால் இது தான் முதல் தானியங்கி பைக் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.