ரூ 52,425 விலையில் வெளியிடப்பட்டது 2018 ஆம் ஆண்டு ஹோண்டா ஆக்டிவா i

ஹோண்டா நிறுவனம் 2018 ஆம் ஆண்டு ஆக்டிவா i  ஸ்கூட்டர் மாடலை ரூ 52,425 சென்னை ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் புதிய வண்ணங்களும் மற்றும் சில கூடுதல் உபகரணங்களும் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. 

2018 ஆம் ஆண்டு ஹோண்டா ஆக்டிவா i  மாடல் ப்ளூ, சிவப்பு, பர்பிள், க்ரெய் மற்றும் பிங்க் என ஐந்து புதிய வண்ணங்களில் கிடைக்கும். மேலும் இந்த மாடலில் புதிய வண்ணங்களை தவிர இக்னிஷன் லாக், சீட் ஓபன் சுவிட்ச் ஆகியவை கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 109.2 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின் 8 bhp (7000 rpm) திறனும் 8.94 Nm (5500rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 60 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு ஹோண்டா ஆக்டிவா i  மாடல் டிவிஎஸ் ஸ்கூட்டி செஸ்ட், சுசூகி லெட்ஸ், யமஹா ரே-ZR மற்றும் ஹீரோ ப்ளெஷர் போன்ற ஸ்கூட்டர் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.