இந்தோனேசியாவில் வெளியிடப்பட்டது 2016 ஹோண்டா CBR 150R : இந்தியாவில் எப்போது?

ஹோண்டா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட  2016 ஹோண்டா CBR  150R மாடலை இந்தோனேசியாவில் வெளியிட்டது. இந்தியாவில் இந்த மாடல் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை விரைவில் வெளியிடப்படும் என்றே எதிர்பார்க்கபடுகிறது.

இந்த மாடல் அதே 149.4 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜினில் தான் கிடைக்கும். ஆனால் இந்த எஞ்சின் என்ஜின்  17.1 bhp (9000 rpm) திறனும்  13.6 Nm (7000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டதாக இருக்கும். பழைய மாடல் போலவே இந்த மாடலும் சிறந்த மைலேஜ் தரும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

வடிவமைப்பில் இந்த மாடல் முற்றிலுமாக புதிய தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய இரட்டை முகப்பு விளக்குகள், ஸ்ப்லிட் சீட்டுகள், புதிய புகைபோக்கிகள் மற்றும் முற்றிலும் புதிய பேரிங் என  முற்றிலுமாக புதிய தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனால் இந்த மாடல் திடீரென பார்பதற்கு யமஹா  YZF-R15 Ver 2.0 தோற்றமளிப்பதை தவிர்க்க முடியவில்லை.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.