ரூ 86,776 விலையில் வெளியிடப்பட்டது ABS பிரேக்குடன் கூடிய புதிய ஹோண்டா X பிளேடு

ஹோண்டா நிறுவனம் புத்தம் ABS பிரேக்குடன் கூடிய புதிய X-பிளேடு 160 மாடலை ரூ 86,776 சென்னை ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இது சாதாரண மாடலை விட ரூ 8000 விலை அதிகம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் ABS பிரேக் தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  ஹோண்டா நிறுவனம் ABS பிரேக்குடன் கூடிய CB ஹார்னெட் 160R மாடலை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடலில் ஏராளமான எட்ஜி டிசைன் ஏலமென்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற ஹோண்டா மாடல்களுடன் ஒப்பிடும் போது இந்த மாடல் சற்று தனித்துவமான வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் புதிய செங்குத்தான முகப்பு விளக்கு, ஸ்போர்டியர் கிராபிக்ஸ், கூர்மையான பின்புற பகுதி மற்றும் முழுவதும் டிஜிட்டல் மயமான இன்ஸ்ட்ருமென்ட் கன்சோலை ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

CB ஹார்னெட் 160R மாடலில் உள்ள 162.71cc கொள்ளளவு கொண்ட ஒற்றை சிலிண்டர் எஞ்சின் தான் இந்த புதிய X-பிளேடு மாடலிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 13.93 bhp (8500 rpm) திறனும் 13.9 Nm (6000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த திறன் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. இந்த மாடலின் முன்புறத்தில் 276 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பின்புறம் 130 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.