புதிய X-பிளேடு மாடலின் முன்பதிவை தொடங்கியது ஹோண்டா

ஹோண்டா நிறுவனம் புத்தம் புதிய X-பிளேடு 160 மாடலின் முன்பதிவை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மாடல் இந்தியாவில் உள்ள அணைத்து ஹோண்டா ஷோரூம்களிலும் முன்பதிவு தற்போது செய்யப்படும். இந்த மாடல் தற்போது நடைபெற்று வரும் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் தான் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே CB ஹார்னெட் 160R எனும் பைக் மாடலை 160cc எஞ்சின் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் ஏராளமான எட்ஜி டிசைன் ஏலமென்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற ஹோண்டா மாடல்களுடன் ஒப்பிடும் போது இந்த மாடல் சற்று தனித்துவமான வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் புதிய செங்குத்தான முகப்பு விளக்கு, ஸ்போர்டியர் கிராபிக்ஸ், கூர்மையான பின்புற பகுதி மற்றும் முழுவதும் டிஜிட்டல் மயமான இன்ஸ்ட்ருமென்ட் கன்சோலை ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

CB ஹார்னெட் 160R மாடலில் உள்ள 162.71cc கொள்ளளவு கொண்ட ஒற்றை சிலிண்டர் எஞ்சின் தான் இந்த புதிய X-பிளேடு மாடலிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 15.25bhp (8500 rpm) திறனும் 14.76 Nm (6500rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த திறன் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. இந்த மாடலின் முன்புறத்தில் 276 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பின்புறம் 130 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் வெளியிடப்படும் போது சுசூகி ஜிக்சர், பஜாஜ் NS 160 மற்றும் யமஹா FZ போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். மேலும் இந்த மாடல் தோராயமாக ரூ 79,000 ஷோரூம் விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.