நவியின் இரண்டு புதிய வேரியன்ட்டுகளை அறிமுகப்படுத்தியது ஹோண்டா

ஹோண்டா நிறுவனம் அட்வென்ச்சர் எடிசன் மற்றும் குரோம் எடிசன் எனும் இரண்டு புதிய நவி ஸ்கூட்டர் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல்களை நவியின் பிரத்தியேக மொபைல் அப்ளிகேஷனில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

பெயரிற்கு ஏற்றார் போலவே அட்வென்ச்சர் எடிசன் மாடலில் பெரிய விண்ட் ஸ்க்ரீன், ஹேண்ட் கார்ட், புதிய வண்ணம் என ஏராளமான அட்வென்ச்சர் சார்ந்த உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. குரோம் எடிசன் மாடலில் ஸ்கூட்டர் முழுவதும் குரோம் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 109.19 cc கொள்ளளவு கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 7.83 Bhp (7000 rpm) திறனையும் 8.96 Nm (5500 rpm) இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஹோண்டா ஸ்கூட்டர் மாடல்களில் உள்ள ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 81 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.

அட்வென்ச்சர் எடிசன் மற்றும் குரோம் எடிசன் மாடல்கள் சாதாரண மாடலை விட முறையே ரூ. 8525 மற்றும் ரூ. 5065 அதிக விலை கொண்டதாக இருக்கும். ஏற்கனவே நவி ஸ்கூட்டர் வைத்திருப்போரும் இந்த கிட்டை வாங்கி தனது மாடலில் பொருத்தி கொள்ளலாம். ஆனால் இந்த கிட் அடுத்த மாதம் முதலே ஷோரூம்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.