CB ஷைன் SP எனும் புதிய மாடலை ரூ.62,595 ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது ஹோண்டா

ஹோண்டா நிறுவனம் CB ஷைன் SP எனும் புதிய மாடலை  ரூ.62,595 ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. CB ஷைன் மாடலில் இருந்து சில மாற்றங்களை செய்து இந்த புதிய மாடலை வெளியிட்டுள்ளது. என்ஜினில் எந்த மாற்றமும் செய்யபடவில்லை அதே 124.7 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் எஞ்சிநிலேயே கிடைக்கிறது. ஆனால் இந்த மாடலில் புதிய 5 ஸ்பீட் கொண்ட கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இதன் செயல்திறன் சற்று அதிகமாக இருக்கும். 

இதன் பெட்ரோல் என்ஜின்  10.54 bhp (7500 rpm) திறனும்  10.64 Nm (6000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.  மேலும் இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் STD , DLX மற்றும் CBS என மூன்று வேரியண்டுகளில் கிடைக்கும். இந்த மாடல் கருப்பு,வெள்ளை, ப்ளூ, சிவப்பு மற்றும் கிரே ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கிறது.

வேரியன்ட் வாரியாக ஷோரூம் விலை விவரம் 

CB ஷைன் SP - STD - ரூ.62595

CB ஷைன் SP - DLX - ரூ.65095

CB ஷைன் SP - CBS - ரூ.67095

அனைத்து வேரியண்டுகளின் ஆன் ரோடு விலை மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்....
http://www.mowval.com/bike-overview.php?bike_company=4&bike_model=147

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.