டிசம்பர் 10 அன்று வெளியிடப்படும் ஹோண்டா CB ஹார்னெட் 160 R

ஹோண்டா  நிறுவனம் CB  ஹார்னெட் 160 R மாடலை டிசம்பர் 10 அன்று வெளியிட இருக்கிறது. ஹோண்டா நிறுவனம், ரெவ்பெஸ்ட் (Revfest ) எனும் மோட்டார் நிகழ்ச்சியில் CB ஹர்நெட் 160 R மாடலை காட்சிப்படுத்தியது. தற்போது. சில நாட்களுக்கு முன்பு தான் அந்த மாடலின் முன்பதிவையும்  தொடங்கியது. நேக்ட்  மாடல் வடிவத்தில் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ஹோண்டா - CB யுனிகார்ன் 160 மாடலில் பயன்படுத்தப்படும் அதே என்ஜின் இதிலும் பயன்படுத்தப்படும்.

இந்த மாடலில் 14.5 bhp திறனும்  14.61 Nm டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்ட 162.71 cc  கொள்ளளவு கொண்ட ஹோண்டா - CB யுனிகார்ன் 160 மாடலில் பயன்படுத்தப்படும் அதே என்ஜின் இதிலும் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் சுசுகி - ஜிக்சர், யமஹா - FZ ஆகிய மாடலுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.