ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் இரண்டு கஷ்டமைஸ் மோட்டார் பைக் படங்கள்

ராயல் என்பீல்ட் நிறுவனம் பிரான்சில் நடைபெற்ற வீல்ஸ் அண்ட் வேவ்ஸ் நிகழ்ச்சியில்  இரண்டு கஷ்டமைஸ் மோட்டார் பைக்குகளை அறிமுகப்படுத்தியது. இது தான் ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ கஷ்டமைஸ் மோட்டார் பைக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கஷ்டமைஸ் பைக்குகளுக்கு Dirty Duck மற்றும் Mo' Powa' என பெயரிட்டுள்ளது ராயல் என்பீல்ட். இதில் Dirty Duck எனும் பைக் காண்டினெண்டல் GT பைக்கிலிருந்தும்   Mo' Powa' எனும் பைக் கிளாசிக் 500 பைக்கிலிருந்தும் கஷ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது.

இந்த கஷ்டமைஸ் மோட்டார் பைக் மாடல்கள் வீல்ஸ் அண்ட் வேவ்ஸ் நிகழ்ச்சிக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. விற்பனைக்கு வெளியிடப்படமாட்டாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதே மாதிரியான கிட்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.