வெளிப்படுத்தப்பட்டது இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் பைக் டார்க் T6X

புனேவை சேர்ந்த டார்க் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் பைக் மாடலான T6X மாடலை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த மாடலுக்கு ரூ.1.25 லட்சம் விலை நிர்ணயம் செய்துள்ளது.

டார்க் மோட்டார்சைக்கிள் நிறுவனம் 2009 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆட்டோ மொபைல் துறையில் பெயர் பெற்ற நிறுவனம் இல்லை என்றாலும் ரேஸிங் துறையில் சற்றே பெயர்பெற்ற நிறுவனம். ஏழு வருட ஆராய்ச்சிக்கு பிறகு இறுதியாக T6X மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் ஒரு முழுமையான சார்ஜுக்கு 100 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். மேலும் அதிகபட்சமாக மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகம் வரையும் செல்லும். இந்த மாடலில் லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 80% வரை சார்ஜ் செய்ய 60 நிமிடங்களும் முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரமும் ஆகும்.

பயன்பாட்டை பொறுத்து இந்த பேட்டரி 80,000 முதல் 1,00,000 கிலோமீட்டர் வரை பயணிக்கும். இந்த மாடல் அதிகபட்சமாக 27Nm வரை இழுவைத்திறனை வழங்கும். டார்க் மோட்டார்சைக்கிள் நிறுவனம் முதலில் T6X மாடலை பெங்களூரு, டெல்லி மற்றும் புனே   போன்ற நகரங்களில் மட்டும் வெளியிட உள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.