இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எதர் A340 வெளிப்படுத்தப்பட்டது

IIT  பட்டதாரிகள் இருவரால் தொடங்கப்பட்ட பெங்களூரை சேர்ந்த எதர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்  மாடலான எதர்  A340 மாடலி வெளிப்படுத்தியது. நிறுவனர்களில் ஒருவரான தருண் மேத்தா இந்த மாடலை அறிமுகம் செய்து வைத்தார் அத்துடன் அந்த மாடல் தொடர்பான தகவல்களையும் விளக்கங்களையும் கூறினார்.

இந்த மாடலில் 7 இன்ச் கொண்ட டச் ஸ்க்ரீன் நேவிகேசன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதை மொபைல் போனுடன் இணைத்து கொள்ள முடியம். இந்த மாடலில் லிதியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு மணி நேரத்திற்குள் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விடலாம். இந்த பேட்டரி 50000 கிலோமீட்டர் வரை உழைக்கும். மேலும் இந்த மாடல் அதிகபட்சமாக 72 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

இந்த மாடல் அடுத்த ஆண்டு வெளியிடப்படும் என தெரிகிறது. மேலும் அடுத்த சில மாதங்களில் டெஸ்ட் டிரைவ் செய்ய சில சிறப்பு மையங்கள் திறக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் இணையத்தில் மட்டுமே விற்பனை செய்யப்படும். இந்தியாவிலேயே இந்த மாடல் செய்யப்படுவதாலும் அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகள் வழங்குவதாலும் விலை கிரைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.