">

மே மாத விற்பனையில் 36% வளர்ச்சியை பெற்றது யமஹா

யமஹா இந்தியா நிறுவனம் கடந்த வருட மே மாத விற்பனையை விட இந்த வருட மே மாதம் 36% வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. யமஹா நிறுவனம் 2016 ஆம் ஆண்டு மே மாதம் 62,748 யூனிட்டுகளையும் 2015 ஆம் வருட மே மாதம் 46,084 யூனிட்டுகளையும் விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் யமஹா நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் செல்வதாகவும் தெரிவித்துள்ளது. 

இது குறித்து யமஹா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைபடுத்துதல் பிரிவு துணை தலைவர் திரு. ராய் குரியன் கூறியதாவது, " யமஹா FZ சீரீஸ் மாடல்கள் விற்பனையில் சிறப்பான பங்களிப்பை தருகிறது. அதேபோல் தற்போது வெளியிடப்பட்ட சலுடோ மாடலும் ஓரளவு விற்பனையை தருகிறது. பேசினோ மாடல் மிகச்சிறப்பான விற்பனையை பதிவு செய்கிறது. மற்றும் சமீபத்தில் வெளியிடப்பட்ட ரே ZR மாடலும் கூடுதல் பலத்தை தருகிறது. மேலும் யமஹா நிறுவனம் மிகச்சிறந்த வளர்ச்சியை வரு மாதங்களில் பெரும் என்று கூறினார்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.