இந்தியாவில் வெளியிடப்பட்டது புதிய இந்தியன் ஸ்ப்ரிங் பீல்ட்

இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் ரூ.30.6 லட்சம் டெல்லி ஷோ ரூம் விலையில்  புதிய ஸ்ப்ரிங்பீல்ட்  குரூசர் மாடலை இந்தியாவில் வெளியிட்டது. இந்த மாடலின் விலை மற்றும் இதர விவரங்கள் ஏப்ரல் மாதமே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதன் முன்பதிவு ஏற்கனவே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த மாடல் இந்தியாவில் உள்ள ஆறு ஷோ ரூம்களிலும் கிடைக்கும்.

இந்த மாடல் இந்தியன் சீப் மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் கருப்பு மற்றும் சிவப்பு என இரண்டு வண்ணங்களில் மட்டும் கிடைக்கும். இந்த மாடலில் இந்தியன் சீப் மாடலில் உள்ள அதே 1811 cc  V - ட்வின் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 138.9 Nm  இழுவைதிறனை வழங்கும். மேலும் இந்த மாடலில் 6 ஸ்பீட் கொண்ட கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடலில் ABS, குரூஸ் கன்ட்ரோல், கீலெஸ் ஸ்டார்ட், குயிக் ரிலீஸ் வின்ட் ஷீல்ட், டயர் பிரஷர் மானிடர், USB, ஸ்பீக்கர் மற்றும் 6.5 இன்ச் இன்போடைன்மென்ட் சிஸ்டம் என ஏராளமான வசதிகள் கிடைக்கும்

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.