வெளியிடப்பட்டது இந்தியன் ஸ்கௌட் பாபர் ஜேக் டேனியல்ஸ் எடிசன்

அமெரிக்காவை சேந்த இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் ஸ்கௌட் பாபர் மாடலின் ஜேக் டேனியல்ஸ் எடிசன் மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சிறப்பு பதிப்பு மாடலை கிளாக் வெர்க்ஸ் கஷ்டம் சைக்கிள்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. மேலும் இந்த மாடல் வெறும் 177 என்ற எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் மேட் கருப்பு வண்ணத்தில் கோல்ட் வண்ண அலங்காரங்கள் கொடுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடல் ஜேக் டேனியல்ஸ் நிறுவனத்தின் தீயணைப்பு ட்ரக் மாடலின் வண்ணத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைப்பட்டுள்ளது. மேலும் ஜேக் டேனியல்ஸ் நிறுவன தீயணைப்பு வீரர்களை பெருமைபடுத்தும் விதமாகவும் இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ஜேக் டேனியல்ஸ் தீயணைப்பு நிறுவன எம்பலம் மற்றும் கோல்ட் வண்ண அலங்காரங்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ள பெரும்பாலான தங்க நிற அலங்காரங்கள் உண்மையான  24 கேரட் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இந்தியன் ஸ்கௌட் பாபர் ஜேக் டேனியல்ஸ் எடிசன் மாடலின் முன்பதிவு மார்ச் 13 ஆம் தேதி முதல் அணைத்து ஷோரூம்களிலும் தொடங்கப்படும். மேலும் இதன் விநியோகம் ஜூலை மாதம் முதல் தொடங்கப்படும். இதன் முன் இதே போல் இந்தியன் நிறுவனம் ஜேக் டேனியல்ஸ் எடிசன் மாடலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவை அனைத்துமே ஒரு சில மணி நேரங்களில் விற்பனையாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படுமா என்பது பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.