இந்தியா வருகிறது இந்தியன் ஸ்கௌட் சிக்ஸ்டி

இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் ஸ்கௌட் சிக்ஸ்டி மாடல் இந்தியாவில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. இந்த மாடல் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் 2015 ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற மிலன் மோட்டார் சைக்கிள் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடல் ஸ்கௌட் மாடலுக்கு கீழாக நிலைநிறுத்தப்படும். இந்த மாடலில் 999 cc  கொள்ளளவு கொண்ட லிக்யூட் கூல்ட் V - ட்வின் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 78 Bhp  திறனையும் 89 Nm  இழுவைதிறனையும் வழங்கும். இந்த என்ஜின் 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடல் கருப்பு, வெள்ளை மற்று சிவப்பு என மூன்று வன்னனகளில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் ரூ. 11 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரையிலான விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.