பெப்ரவரி 23 ஆம் தேதி வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட KTM டியூக் 200 மற்றும் 390

KTM  நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டு  டியூக் 200 மற்றும் 390 மாடல்களை பெப்ரவரி 23  ஆம் தேதி இந்தியாவில் வெளியிட உள்ளது.  வடிவமைப்பில் சில ஒப்பனை மாற்றங்களும் என்ஜினிலும் BSIV  மாசு கட்டுப்பாட்டிற்கு ஏற்றவாறு சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் புல் பேரிங் வெர்சனான டியூக் RC  200 மற்றும் 390 மாடல்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை புதிய வண்ணம் மற்றும் கிராபிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.  KTM  DUKE 200 மாடலில் 199.5 CC  கொள்ளளவு கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 26 BHP   திறனும் 19.2 NM  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடலில் புகை போக்கி அடிப்புறத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

KTM  DUKE 390 மாடலில் 373.3 CC  கொள்ளளவு கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 43.5 BHP   திறனும் 36 NM  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடலில் புகை போக்கி பக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ABS  நிரந்தர ஆப்ஷனாக கிடைக்கும். மேலும் இந்த மாடலில் இரட்டை முகப்பு விளக்கு கொடுக்கப்பட்டிருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.