புதிய வண்ணத்தில் வெளியிடப்பட்டது KTM RC200

KTM நிறுவனம் இந்தியாவில் RC200 மாடலை புதிய கருப்பு நிறத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மாடல் ஏற்கனவே வெளியிடப்பட்டு வந்த வண்ணத்திலும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் வண்ணத்தை தவிர வேறு எந்த மாற்றமும் கொடுக்கப்படவில்லை, அதேபோல் விலையிலும் எந்த மாற்றமும் இல்லை அதே 1.77 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் தான் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய மாடலில் கருப்பு, ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிற வண்ணங்களின் கலவை கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் வண்ணத்தில் ஏற்கனவே  RC390  மாடல் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் 199.5 CC  கொள்ளளவு கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 26 BHP   திறனும் 19.2 NM  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. மேலும் இந்த மாடலில் ஆறு ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த மாடல் பஜாஜ் பல்சர் RS200, யமஹா ஃபேசர் 25 மற்றும் ஹோண்டா CBR250R போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.