ரூ 6.5 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2018 ஆம் ஆண்டு கவாஸாகி வெர்ஸிஸ் 650

கவாஸாகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டு வெர்ஸிஸ் 650 மாடலை ரூ 6.5 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் வெறும் ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மற்றபடி எஞ்சின் மற்றும் வடிவமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்த மாடலில் புதிய கிராபிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. இந்த மாடலில் அதே 648 cc பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 68 Bhp திறனையும் 64 Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த திறன் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. அதேபோல் பிரேக் அமைப்பிலும் எந்த மாற்றமும் இல்லை. முன்புறத்தில் 300 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் 250 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ABS நிரந்தர அம்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஆப்ரோடு மாடல்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.