புதிய ப்ளூ வண்ணத்தில் வெளியிடப்பட்டது கவாஸாகி நிஞ்ஜா 650

கவாஸாகி நிறுவனம் புதிய ப்ளூ வண்ணத்திலான நிஞ்ஜா 650 மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த புதிய மாடல் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கருப்பு நிற மாடலுக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலுடன் கவாஸாகி நிறுவனத்தின் பாரம்பரிய பச்சை வண்ண மாடலும் கிடைக்கும்.

இந்த மாடலில் 649 cc கொள்ளளவு கொண்ட 2 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின் 68 bhp (8000 rpm) திறனும் 65.7 Nm (6500rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 10 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. இந்த மாடலில் ஸ்லிப்பர் கிளட்ச் உடன் கூடிய ஆறு ஸ்பீட் மனுவால் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் முன்புறத்தில் 300 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட ட்வின் டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் 220 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ABS பிரேக் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.