இந்தியாவில் வெளியிடப்பட்டது கவாசாகி நிஞ்சா ZX-14R மற்றும் நிஞ்சா ZX-10R

கவசகி நிறுவனம் இந்தியாவில்  நிஞ்சா ZX-14R மற்றும் நிஞ்சா ZX-10R சூப்பர் பைக் மாடல்களை முறையே ரூ.17.9 மற்றும் 16.4 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. பழைய மாடல்களுக்கும் இதற்கும்  வடிவத்தில் ஏதும் பெரிய மாற்றங்கள் இல்லை செயல் திறனில் மட்டும்  சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

நிஞ்சா ZX-14R மாடலில் 1441 cc  கொள்ளளவு கொண்ட 4 சிலிண்டர் லிக்யுட் கூல்ட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 210 Bhp  திறனையும் 158 Nm  இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடலில் ABS  அம்ற்றும் டிரைவ் மோட் ஆகியவை உள்ளது. மேலும் இந்த மாடல் யூரோ6 மாசுக்கட்டுப்பாட்டில் மட்டுமே கிடைக்கும்.

நிஞ்சா ZX-10R மாடலில் 998 cc  கொள்ளளவு கொண்ட 4 சிலிண்டர் லிக்யுட் கூல்ட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 210 Bhp  திறனையும் 113 Nm  இழுவைதிறனையும் வழங்கும். இந்த இரண்டு மாடலும் சூப்பர் பைக் மாடலை சேர்ந்தது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.