இந்தியாவில் வெளியிடப்பட்டது 2019 ஆம் ஆண்டு கவாஸாகி Z900 மற்றும் Z650

கவாஸாகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டு Z900 மற்றும் Z650 மாடல்களை முறையே ரூ 7.68 லட்சம் மற்றும் ரூ 5.29 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல்களில் புதிய கிராபிக்ஸும், புதிய வண்ணமும் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி பெரிய மாற்றங்கள் ஏதும் இந்த மாடலில் செய்யப்படவில்லை.

கவாஸாகி Z900 
இந்த மாடலில் 948 cc கொள்ளளவு கொண்ட இன்-லைன் நான்கு சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 125 Bhp திறனையும் 98.6 Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடலில் ABS நிரந்தர அம்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் சிவப்பு & கிரே கலந்த கலவை, வெள்ளை & கருப்பு கலந்த கலவை மற்றும் கருப்பு & பச்சை கலந்த கலவை என மூன்று வண்ணங்களில் கிடைக்கும். 

கவாஸாகி Z650
இந்த மாடலில் 649 cc பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 68 Bhp திறனையும் 65.7 Nm இழுவைத்திறனையும் வழங்கும். வழங்கும். மேலும் இந்த மாடலில் ABS  மற்றும் புதிய ஸ்லிப்பர் க்ளட்ச் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.