ரூ.40,000 வரை விலை குறைந்தது கவாஸாகி நிஞ்ஜா 650

கவாஸாகி நிறுவனம் தனது 120 வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக நிஞ்ஜா 650 மாடலின் விலையை ரூ.40,000 வரை குறைத்துள்ளது. இதுவரை ரூ.5.37 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிஞ்ஜா 650 மாடல் தற்போது ரூ.4.97 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த மாடல் பச்சை மற்றும் வெள்ளை ஆகிய  2 வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் 649 cc  கொள்ளளவு கொண்ட 2 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் பெட்ரோல் என்ஜின்  72.1 bhp (8500 rpm) திறனும் 64 Nm (7000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 10 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. 

இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 2 முதல் 3 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல் அதிக பட்சமாக 200 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

இந்த விலை குறைப்பு ஆகஸ்ட் 1 அம தேதியில் இருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த விலை குறைப்பு 2015 ஆம் ஆண்டு தய்யரிக்கப்பட்ட பைக்குகளை மட்டுமே பொருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.