ரூ 4.6 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது கவாஸாகி வெர்ஸிஸ் X-300

கவாஸாகி நிறுவனம் புதிய வெர்ஸிஸ் X-300 மாடலை ரூ 4.6 லட்சம் மும்பை ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் கவாஸாகி நிறுவனத்தின் விலை குறைந்த மற்றும் ஆரம்ப நிலை டூரிங் மாடல் ஆகும். 

இந்த மாடலில் நிஞ்ஜா 300 மற்றும் Z300 போன்ற மாடல்களில் உள்ள அதே பேரலல் ட்வின் 296 cc கொள்ளளவு கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 38.9 Bhp திறனையும் 27 Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆறு ஸ்பீட் கியர் பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் முன்புறத்தில் 290 மில்லி மீட்டர் விட்டமும் பின்புறத்தில் 290 மில்லி மீட்டர் விட்டமும் கொண்ட பெடல் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ABS சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. 

புதிய கவாஸாகி வெர்ஸிஸ் X-300 மாடலில் லாங் டிராவல் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. இது கரடு முரடான சாலைகளில் சொகுசான பயண அனுபவத்தை வாங்க உதவும். மேலும் இந்த மாடலில் 17 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் மற்ற கவாஸாகி மாடல்கள் போலவே பச்சை கலந்த நிறத்தில் மட்டுமே கிடைக்கும். இந்த விலையில் எந்த ஒரு டூரிங் மாடலும் தற்போது இந்தியாவில் இல்லை. ராயல் என்பீல்ட் ஹிமாலயன் மாடல் மட்டுமே இந்த செக்மண்ட்டில் தற்போது இந்தியாவில் உள்ளது ஆனால் இந்த மாடலுடன் ஒப்பிடும் போது விலை மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.