ரூ. 21.9 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது கவாஸாகி ZX-10RR

கவாஸாகி நிறுவனம் ZX-10RR லிமிடெட் எடிசன் மாடலை ரூ. 21.9 லட்சம் டெல்லி ஷோ ரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இது கவாஸாகி ZX-10R மாடலில் ரெஸ் ஸ்பெக் வேரியன்ட் ஆகும். மேலும் இந்த மாடல் உலகம் முழுவதும் வெறும் 500 எண்ணிக்கையில் மட்டுமே வெளியிடப்படும்.

இந்த மாடலில் செயல்திறன், வடிவமைப்பு, ஏரோ டைனமிக் என அனைத்திலும் மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ஏராளமான தொழில்நுட்பங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலிலும் ZX-10R மாடலில் 998cc இன்லைன் போர் சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. அனால் இந்த என்ஜின் 210 Bhp திறனையும் 113 Nm  இழுவைத்திறனையும் வழங்கும்.

இந்த மாடலில் பிபின்புற இருக்கை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது மேட் பிளாக் என்ற ஒரே கருப்பு வண்ணத்தில் மட்டுமே கிடைக்கிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.