இந்தியாவில் நுழைந்தது MV அகுஸ்டா

இத்தாலியை சேர்ந்த சூப்பர் பைக் நிறுவனமான MV அகுஸ்டா நிறுவனம் புனேவை சேர்ந்த கைனெடிக் நிறுவனத்துடன் இணைந்து தனது அத்தியாயத்தை இந்தியாவில் தொடங்கியது.  இதற்கென Motoroyale  எனும் பெயரில் பிரத்தியேக ஷோ ரூம்கள் திறக்கப்படும். MV அகுஸ்டா நிறுவனம் தற்போது இந்தியாவில் ப்ரூடல் 1090, F4 மற்றும் F3 800 எனும் மூன்று மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

MV அகுஸ்டா நிறுவனம் தனது முதல் ஷோ ரூமை புனேயில் தொடங்கியது. அதை தொடர்ந்து அகமதாபாத், சென்னை, பெங்களூர், மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் ஷோரூம்கள் திறக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஷோரூம்களில் உலகத்தரம் வாய்ந்த விற்பனைக்கு முந்தய மற்றும் பிந்தைய சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் MV  அகுஸ்டா மாடல்களின் மும்பை ஷோரூம் விலை விவரம்:

F3800 - Rs. 16.78 lakh
F4 - Rs. 26.87 lakh
F4 RR - Rs. 35.71 lakh
Brutale 1090 - Rs. 20.10 lakh
Brutale 1090 RR - Rs. 24.78 lakh

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.