MV அகுஸ்டா-சகாடோ F4Z மாடலின் டீசர் வீடியோ வெளியிடப்பட்டது

MV  அகுஸ்டா நிறுவனம் F4Z பைக்  மாடலின் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் F4Z பைக்  மாடலின் முழுமையான தோற்றமும் தெரிகிறது. மேலும் இந்த பைக் சகாடோ நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 10 ஆம் தேதி வெளிப்படுத்தப்பட உள்ளது.

இந்த மாடல் F4 சூப்பர்ஸ்போர்ட் மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  F4 சூப்பர்ஸ்போர்ட் மாடலில் உள்ள அதே சேஸி மற்றும் 4 சிலிண்டர் என்ஜின் தான் இதிலும் பயன் படுத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 204 பிப் திறனை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் ரெட்ரோ ஸ்டைல் வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெர்ராரி, ஆஸ்டன் மார்ட்டின், ரோல்ஸ் ராய்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு கார்களை வடிவமைத்துக்கொடுத்த சகாடோ நிறுவனம் முதன் முறையாக பைக் மாடல் ஒன்றை வடிவமைத்துள்ளது. டீசரை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.