ரூ. 50920 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மகிந்திரா கஸ்டோ 125

மகிந்திரா நிறுவனம் பெங்களூருவில் கஸ்டோ 125 ஸ்கூட்டர் மாடலை ரூ. 50920 சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டது. இந்த மாடல் DX  மற்றும் VX  எனும் இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கிறது. DX  வேரியன்ட் ரூ.50920 சென்னை ஷோ ரூம் விலையிலும் VX  வேரியன்ட் ரூ.54920 சென்னை ஷோ ரூம் விலையிலும் கிடைக்கும்.

இந்த மாடலில் உயரம் மாற்றக்கூடிய இருக்கை, பைண்ட் மீ லேம்ப் மற்றும் ரிமோட் கீ என ஏராளமான வசதிகள் கிடைக்கிறது. இந்த மாடலில் 125 cc  கொள்ளளவு கொண்ட ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 8.5 Bhp  (7000 rpm ) திறனையும் 10 Nm  (5500 rpm ) இழுவைதிறனையும் வழங்கும். இத்துடன் CVT  ஆட்டோமேடிக்  கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடல் ஆரஞ்சு, வெள்ளை, கருப்பு மற்றும் சிவப்பு என 4 வண்ணங்களில் கிடைக்கும். மேலும் டியூப் லெஸ் தயருடனும் கிடைக்கும். இந்த மாடல் ஹோண்டா ஆக்டிவா 125 மாடலுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.