இந்தியாவில் வெளியிடப்பட்டது புதிய மஹிந்திரா மோஜோ UT 300

மஹிந்திரா நிறுவனம் மோஜோ மாடலின் விலை குறைந்த வேரியன்ட்டான மோஜோ UT 300 மாடலை ரூ 1.49 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம்  மோஜோ XT 300 மாடலிலிருந்து சில உபகரணங்களை நீக்கி இந்த புதிய விலை குறைந்த  மோஜோ UT 300 மாடலை உருவாக்கியுள்ளது. மஹிந்திரா நிறுவனம் இந்த மாதம் மட்டும் ரூ 10000 அறிமுக தள்ளுபடியை இந்த மாடலுக்கு வழங்குவது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் அப்படியே மோஜோ UT 300 போலவே தான் உள்ளது. ஆனால், கோல்ட் வண்ண ட்வின் பார், இரட்டை வண்ண புகை போக்கி மற்றும் கண் இமை போன்ற பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் ஆகியவை இந்த மாடலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடலிலும் அதே 295CC கொள்ளளவு கொண்ட 4 ஸ்ட்ரோக் லிக்யூட் கூல்ட் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இதன் செயல் திறன் சற்று குறைக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 23 Bhp திறனும் 25.2 Nm இழுவை திறனும் வழங்கும். மேலும் இந்தமாடலில் 6 வேக கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் முன்புறம் மற்றும் பின்புறம் முறையே 320 மில்லி மீட்டர் மற்றும் 240 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.