2017-ல் பீஜோ ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் மகிந்திரா

மகிந்திரா நிறுவனம் 2017 ஆம் ஆண்டு பீஜோ ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ப்ரீமியம் ஸ்கூட்டர் செக்மெண்டில் இந்த பீஜோ ஸ்கூட்டர்களை வெஸ்பா ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக களமிறக்க உள்ளது. 

மகிந்திரா நிறுவனம் கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள், கார்கள், SUV கள், பைக்குகள், ஸ்கூட்டர்கள் மற்றும் டிராக்டர்கள் என அனைத்து விதமான செக்மென்டையும் கொண்டுள்ள ஒரு மிகப்பெரிய இந்திய நிறுவனம்.  எனினும் இரண்டு சக்கர வாகன பிரிவில்  குறைவான விற்பனையையே பதிவு செய்து வருகிறது.  எனவே தற்போது ப்ரீமியம் ஸ்கூட்டர் செக்மெண்டில்  பீஜோ ஸ்கூட்டர் பிராண்டை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.  ஏற்கனவே மகிந்திரா நிறுவனம் ப்ரீமியம் பைக் செக்மெண்டில் மோஜோ பைக் மாடலை விற்பனை செய்து வருகிறது.

மகிந்திரா நிறுவனம் பீஜோ ஸ்கூட்டர்களை 2016 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் மஹிந்திரா நிறுவனம் பிரிட்டனை சேர்ந்த கிளாசிக் மோட்டார் பைக் நிறுவனங்களான நோர்டன் மற்றும் BSA பிராண்டுகளை கையகப்படுத்த இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.