ரூ.64574 விலையில் வெளியிடப்பட்டது புதிய 2016 சுசுகி அக்செஸ் 125

சுசுகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2016 அக்செஸ் 125 ஸ்கூட்டர் மாடலை ரூ. 64574 சென்னை ஆன் ரோடு விலையில் வெளியிட்டது. இந்த மாடல் 2016 டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுதப்பட்டது. மேலும் இந்த மாடலின் வடிவம் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாடலில் முகப்பு விளக்கு, இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் மற்றும் வடிவம் என பெரும்பாலான பகுதிகள் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாடலில் 124 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின்  8.6 bhp (7500rpm)   திறனும் 10.2 NM (5000rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.  இந்த மாடலில் CVT  கிட் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் டிஸ்க் ப்ரேக் ஆப்சனாகவும் கிடைக்கும். 

இந்த மாடல் கருப்பு, கிரே, சிவப்பு, வெள்ளை மற்றும் ப்ளூ என 5 விதமான வண்ணங்களில் கிடைக்கும். இந்த மாடல் 64 Kmpl  மைலேஜ் தரும். மேலும் இந்த மாடலில் டியூப்லெஸ் டயரும் கிடைக்கும். இந்த மாடல் ஹோண்டா ஆக்டிவா 125 மாடலுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.