ரூ.5.86 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது புதிய ஹார்லி டேவிட்ஸன் ஸ்ட்ரீட் ரோட் 750

ஹார்லி டேவிட்ஸன் நிறுவனம் ஆரம்ப நிலை மாடலான ஸ்ட்ரீட் ரோட் 750 மாடலை ரூ.5.86 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல்  ஸ்ட்ரீட் 750 மாடலின் அடிப்படையில் XR டிர்ட் சீரீஸ் மாடலின் வடிவமைப்பை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

பியூயல் டேங்க், சைடு பேனல் மற்றும் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் என ஏராளமான பாகங்கள் ஸ்ட்ரீட் 750 மாடலிலிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ட்ரீட் 750 மாடலுடன் ஒப்பிடும் பொது இந்த மாடலின் வீல் பேஸ் குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தரை இடைவெளியும்(205 மிமீ), இருக்கை உயரமும்(765 மிமீ) அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலிலும்  ஸ்ட்ரீட் 750 மாடலில் உள்ள அதே 750 cc V-ட்வின் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த மாடல் 18 சதவீதம் அதிக திறனை வெளிப்படுத்தும். இந்த மாடல் அதிகபட்சமாக 62Nm @4,000rpm இழுவைத்திறனை வழங்கும். இந்த மாடலில் ஆறு ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் ABS நிரந்தர ஆப்ஷனாக கிடைக்கும். மேலும் இந்த மாடல் விவிட் கருப்பு, சார்கோல் டெனிம் மற்றும் ஆலிவ் கோல்ட் என மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.