ரூ.61,800 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய ஹீரோ அச்சீவர் 150

ஹீரோ நிறுவனம் புதிய அச்சீவர் 150 மடலை ரூ.61,800 டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது.  ட்ரம் பிரேக் வேரியன்ட் ரூ.61,800 விலையிலும் டிஸ்க் பிரேக் வேரியன்ட் ரூ.62,800 விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளது. பழைய மாடலுடன் ஒப்பிடும் போது சற்று சிறப்பான தோற்றத்தையே தெரிகிறது. மேலும் இந்த மாடலில் ஹீரோ நிறுவனத்தின்  i3s எனும்  எஞ்சின் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பமும் பொருத்தப்பட்டுள்ளது. இது சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்க துணை புரியும்.

இந்த மாடலில் ஹீரோ நிறுவனத்தின் மற்ற மாடல்களில் உள்ள அதே 150cc எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது 13.6 Bhp  திறனையும் 12.8 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இது தான் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம் கொண்ட முதல் 150 CC எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 7 கோடி வாகனங்களை விற்பனை  செய்ததை கொண்டாடும் விதமாக இதன் சிறப்பு பாதிப்பு மாடலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இது வெறும் 70 எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.