நாளை வெளியிடப்படும் புதிய ஹீரோ ஸ்ப்ளெண்டர் i- ஸ்மார்ட் 110

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் புதிய ஹீரோ ஸ்ப்ளெண்டர்  i- ஸ்மார்ட் 110 பைக் மாடலை நாளை வெளியிடுகிறது. இந்த மாடல் 2016 டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த புதிய  ஸ்ப்ளெண்டர்  i- ஸ்மார்ட் மாடலில் தோற்றம் மற்றும் என்ஜின் என அனைத்திலும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக் தான் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தால் முழுமையாக உருவாக்கப்பட்ட முதல் பைக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் i3s எனும்  தொழில்நுட்பமும் பொருத்தப்பட்டுள்ளது. இது சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்க துணை புரியும். 

இந்த மாடலில் 110 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இது என்ஜின்  9.1 bhp (7500 rpm) திறனும் 9 Nm (5500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடலில் 4 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் தோராயமாக ரூ. 53000 விலை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.