க்ரேஸியா எனும் புதிய ஸ்கூட்டர் மாடலின் டீசரை வெளியிட்டது ஹோண்டா

ஹோண்டா நிறுவனம் க்ரேஸியா எனும் புத்தம் புதிய ஸ்கூட்டர் மாடலின் டீசர் வீடீயோவை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த புதிய ஸ்கூட்டர் மாடலின் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. ரூ 2000  முன்பணமாக செலுத்தி அனைத்து ஷோரூம்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். 

ஹோண்டா நிறுவனம் இந்த ஸ்கூட்டர் தொடர்பான டீசர் வீடீயோவை மட்டும் தான் வெளியிட்டுள்ளது. மற்றபடி எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த மாடல் தான் ஹோண்டா நிறுவனத்தின் விலை உயர்த்த ஸ்கூட்டர் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் 125cc எஞ்சினுடன் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் பார்ப்பதற்கு சற்று பெரிய ஸ்கூட்டர் மாடல் போல தோற்றமளிக்கிறது. எனவே ஆண்களையும் கவரும் விதத்தில் நிறைய அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் இந்த புதிய ஸ்கூட்டர் நவம்பர் மாதம் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.