புதிய ராயல் என்பீல்ட் தண்டர் பேர்ட் 500X மாடலின் படங்கள் கசிந்தது

ராயல் என்பீல்ட் தண்டர் பேர்ட் மாடலின் அடிப்படையிலான ஒரு புதிய தண்டர் பேர்ட் 500X மாடலின் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இந்த மாடல் தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலையும் ராயல் என்பீல்ட் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இந்த மாடலில் நிறைய ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. எஞ்சினில் மாற்றம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடலில் புதிய ஹேண்டில் பார், கிளாசிக் ரெட்டிச் சீரீஸ் போன்ற வண்ணம்,புதிய இருக்கை, புதிய அலாய் வீல் மற்றும் டியூப் லெஸ் டயர் என நிறைய ஒப்பனை மாற்றங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்ட் மாடல்களில் முதன் முறையாக இந்த மாடலில் தான் அலாய் வீல் மற்றும் டியூப் லெஸ் டயர்  கொடுக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் பின்புற வீல் ரிம் அமைப்பும் சிறிது மாற்றம் பெற்றுள்ளது.

இந்த மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் இருக்காது அதே 499cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் தான் பொருத்தப்பட்டிருக்கும். இந்த  என்ஜின்  27.2 bhp (5250rpm)   திறனும் 41.3 NM (4000rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த புதிய மாடல் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் 350cc எஞ்சினுடன் வெளியிடப்படுமா என்பது தெரியவில்லை. மேலும் விவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.