ரூ 62,044 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய சுசுகி அக்செஸ் 125 CBS

சுசுகி நிறுவனம் CBS (Combined Braking System) பிரேக் உடன் கூடிய அக்செஸ் 125 ஸ்கூட்டர் மாடலை ரூ 62,044 சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. மேலும் CBS (Combined Braking System) பிரேக் உடன் கூடிய அக்செஸ் 125 SE ஸ்கூட்டர்  ரூ 63,644 விலையிலும் கிடைக்கும் மற்றும் அக்செஸ் 125 SE  மாடல் புதிய மெட்டாலிக் சில்வர் சோனிக் எனும் வண்ணத்திலும் கூடுதலாக வெளியிடப்பட்டுள்ளது. 

வேரியன்ட் வாரியாக சென்னை ஷோரூம் விலை விவரம்:
சுசுகி அக்செஸ் 125 

  • Drum Brake Variant - ரூ 58,109
  • Disk Brake Variant - ரூ 61,413
  • Disc Brake with CBS - ரூ 62,044

சுசுகி அக்செஸ் 125 SE

  • Drum Brake Variant - ரூ 58,109
  • Disk Brake Variant - ரூ 61,413
  • Disc Brake with CBS - ரூ 63,644

இந்த மாடலில் 124 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின்  8.7 bhp (7000rpm)   திறனும் 10.2 NM (5000rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.  இந்த மாடலில் CVT  கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் CBS (Combined Braking System) பிரேக் கொண்ட மாடல் ஏற்கனவே கிடைக்கும் வண்ணத்திலும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.