TVS அப்பாச்சி RTR180 ABS யின் புதிய மேட் ப்ளூ எடிசன்

பண்டிகை காலத்தை முன்னிட்டு அணைத்து நிறுவனங்களும் சிறப்பு பதிப்புகளை வெளியட்டு வருகிறது. அந்த வகையில் TVS  அப்பாச்சி RTR180 ABS மாடல் புதிய ப்ளூ வண்ணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த மாடல் கருப்பு மற்றும் வெள்ளை  ஆகிய  2 வண்ணங்களில் வெளியிடப்பட்டு வருகிறது தற்போது ப்ளூ வண்ணத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.  

இந்த மாடலில் 177.4 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் பெட்ரோல் என்ஜின்  17.3 bhp (8500 rpm) திறனும் 15.5 Nm (6500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 45 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 5 முதல் 6 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும் இந்த மாடல் அதிக பட்சமாக 124 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.