BSIV என்ஜினுடன் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட TVS ஸ்கூட்டி செஸ்ட்

TVS  நிறுவனம் BSIV என்ஜினுடன் கூடிய புதிய  ஸ்கூட்டி செஸ்ட் மாடலை வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் சில புதிய உபகரணங்களும் மற்றும் மேட் சீரீஸ் எனும் பெயரில் புதிய வண்ணங்களும் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. இதன் சாதாரண மாடல் ரூ 48786 சென்னை ஷோரூம் விலையிலும்  மேட் சீரீஸ் மாடல் ரூ 50286 சென்னை ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

புதிய மேட் சீரீஸ் மாடலில் புதிய 3D லோகோ, இருக்கையின் அடியில் உள்ள சேமிப்பகத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்குகள், இரட்டை வண்ண இருக்கை மற்றும் USB சார்ஜ் வசதி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த மாடல் மேட் சீரீஸில் ப்ளூ, கருப்பு, மஞ்சள் மற்றும் பிரவுன் என நான்கு வண்ணங்களிலும் ஹிமாலயன் ஹைஸ் சீரீஸில் ப்ளூ, பிங்க், பீச் மற்றும் ஆரஞ்சு என நான்கு வண்ணங்களிலும் கிடைக்கும்.

இந்த மாடலில் 109.7 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் பெட்ரோல் என்ஜின்  7.9 bhp (7500 rpm) திறனும்  8.4 Nm (5500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 62 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. இந்த மாடலில் CVT கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 9 முதல் 10 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல் அதிக பட்சமாக 75 முதல் 80 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.