ரூ. 1.19 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புத்தம் புதிய யமஹா FZ25

யமஹா நிறுவனம் புத்தம் புதிய FZ25 எனும் நேக்ட் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை ரூ. 1.19 லட்சம் டெல்லி ஷோ ரூம் விலையில் வெளியிட்டுள்ளது. FZ  வெர்சன் 2.0 மற்றும் MT-03 போன்ற மாடல்களின் வடிவங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

ஆட்டோமேட்டிக் LED முகப்பு விளக்குகள், LCD  இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சராசரி மைலேஜ் ஆகியவையும் தெரியும். இந்த மாடலில் 249 cc கொள்ளளவு கொண்ட பியூவல் இன்ஜெக்சன் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 20.9 Bhp (8,000rpm) திறனையும் 20 Nm (6,000rpm) இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடலில் 5 ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் லிட்டருக்கு 43 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு வீலிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் ABS ஆப்ஷனாக கூட கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. TVS அப்பாச்சி 200 4V,  பஜாஜ் பல்சர் 200,  ஹோண்டா CBR  250, KTM  டியூக் 200  போன்ற ஏராளமான மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.